ஹொரவப்பொத்தானையில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 88 சாரதிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

ஹொரவப்பொத்தானை பொலிஸ் பிரிவில் கடந்த மூன்று மாதத்தினுள் மதுபோதையில் வாகனம் செலுத்திய 88 சாரதிகளுக்கு கெப்பித்திகொல்லாவ நீதிமன்ற நீதவான் மாலிந்த ஹர்ஷன த அல்விஸ் 29 இலட்சத்து 2 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளார்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக ஜூலை மாதம் கைது செய்து நீதி மன்றில் ஆஜர்படுத்திய 32 சாரதிகளுக்கு 10 இலட்சத்து 38 ஆயிரம் ரூபா அபராதமும் ஆகஸ்ட் மாதம் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 28 சாரதிகளுக்கு 8 இலட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபா அபராதமும் செப்டம்பர் மாதம் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் நீதி மன்றில் ஆஜர்படுத்திய சந்தேக நபர்களான 28 சாரதிகளுக்கு 9 இலட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபா அபராதமாக விதிக்கப்பட்டுள்ளன.

ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் லக்மால் விஜேரத்னவின் ஆலோசனையின் கீழ் போக்கு வரத்து பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட போக்குவரத்து பிரிவின் உத்தியோகத்தர்கள் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

யாழ்ப்பாணக் கோட்டையும் கிரலாகல தூபியும்.

ஹொரவபொத்தானயில் நேற்றிரவு நடந்த சோக சம்பவம்...!

ஹொரொவ்பொதானையில் நடந்தது என்ன?? ஹொரொவ்பொதானை பெரிய பள்ளிவாசல் தலைவர் விளக்கம்.