Posts

Showing posts from March, 2020

ஹொரவபொத்தானயில் நேற்றிரவு நடந்த சோக சம்பவம்...!

Image
ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனவிழுந்தான் பகுதியில் யானையின் தாக்குதலினால் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்றிரவு(31) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் கெபிதிகொல்லாவ - அற்றாவ பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹலீம் முகம்மட் அஸ்வர் (29வயது) எனவும் தெரியவருகின்றது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ஆனவிழுந்தான் பிரதான வீதியின் ஊடாக அவரது சக நண்பருடன் மோட்டார் சைக்கிளில் அவரது தோட்டத்திற்கு காவலுக்காக சென்றுகொண்டிருந்தபோது குறுக்கே வந்த யானை தாக்கிய நிலையில் அருகிலுள்ள கபுகொல்லாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது கபுகொல்லாவ பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை ஹொரவ்பத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹொரொவ்பொதானையில் நடந்தது என்ன?? ஹொரொவ்பொதானை பெரிய பள்ளிவாசல் தலைவர் விளக்கம்.

Image
ஹொரொவ்பொதானை நகரிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமையப் பெற்றுள்ளதே கிவ்லேகட கிராமம். இக்கிராமத்தில் ஆசிரியர்கள், உலமாக்கள், புத்தி ஜீவிகள், அரச திணைக்கள அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள், வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் என பல தரப்பட்டோர் வாழ்கிறார்கள்.  நாட்டில் ஏற்பட்டிருகின்ற ஒரு அசாதாரண அச்சமான சூழ் நிலையால் மக்கள் ஒன்று கூடுவதனை சுகாதார பாதுகாப்பு நலன் கருதி அரசு தடைவிதித்துள்ளது. இது அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சார்ந்த சகல தரப்பினருக்கும் பொதுவானது. இது பற்றி சகல கலாசார திணைக்கலங்களும் அதன் கீழ் இயங்கும் பிரிவுகளுக்கும் தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளன. இதனடிப்படையிலேயே மஸ்ஜித்கள், மத்ரஸாக்கள், மக்தப் பிரிவுகள் போன்ற பல்வேறு பிரிவுகள் மூடப்பட்டிருந்தன. அனேக நாடுகளிலும் இதுவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பித்த பிறகு மற்றும் தளர்த்திய பிறகு எவ்வாறு நடக்க வேண்டும் என்று பொலீஸ் மற்றும் MOH ஊடாக மக்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அதனை மீறுவது யாராக இருந்தாலும் தவறே. இலங்கையர் என்ற அடிப்படையில் நாம் கட்டுப்பட்டு

கொரோனா வைரஸ்: ஹொரவபொத்தான பிரதேச செயலாளரின் முக்கிய அறிவித்தல்

Image
கொரோனா வைரஸ் காரணமாக ஹொரவபொத்தானை பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, அந்த மக்களுக்கு உலர் உணவு நிவாரணம்  சேகரித்து விநியோகிக்க  ஹொரவபொத்தான பிரதேச செயலகம் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. உலர் உணவுகளை வழங்குவதற்கு இந்த பகுதியின் மக்கள் நலன் விரும்பிகள் பங்களிக்க முடியும் என்பதை நான் தாழ்மையுடன் உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன். வழங்கக்கூடிய உணவுப் பொருட்கள்: உலர் உணவுகள் அரிசி, சீனி, தேயிலை, பயறு, செமன், பற்பசை, சோப்பு... உதவி செய்ய விரும்புவோர் வியாழக்கிழமைக்கு முன்னர் கிடைக்கும் வகையில் பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். பிரதேச செயலாளர், ஹொரவபொத்தான.