Posts

Showing posts from September, 2020

வேகமாக பரவி வரும் போலி செய்தி... ஹொரவ்பொத்தான வாழ் மக்கள் அச்சப்பட வேண்டாம்.

Image
இலங்கையில் மிகப் பெரிய உயிருள்ள யானையாகக் கருதப்படும் 'கல்கமுவே காவந்திசா' என்ற யானை ஹொரவ்பொத்தான யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்லத் தயாராகி வருவதாகக் குறிப்பிட்டு கடந்த நாட்களில் பல பேஸ்புக் பக்கங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் மிகப் பெரிய உயிருள்ள யானையான 'கல்கமுவே காவந்திசா யானை' ஹொரவ்பொத்தான யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்!  "கல்கமுவா காவந்திசா யானையின் உயிருக்கு குரல் எழுப்பு" என்ற கருப்பொருளின் கீழ் ஏராளமான சமூக ஊடக பயனர்களிடையே பரவி வருகிறது. ஒரே கருத்தை வழங்கும் பதிவுகள் பல்வேறு வழிகளில் வழங்கப்பட்டுள்ளன என்பதும் காண முடிகிறது.  இது குறித்த உண்மைகளை உறுதிப்படுத்த வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் ஊடகப் பிரிவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியபோது கல்கமுவாவிலிருந்து காவந்திசா என்ற யானையை ஹொரவ்பொத்தான யானைகள் சரணாலயத்திற்கு அழைத்துச் செல்லும் எண்ணம் எதுவும் இல்லை என்று வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் தலைமை ஊடக அதிகாரி கூறினார்.  இது தொடர்பில் வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க த

அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு!

Image
அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கைது செய்யப்பட்ட 100 மாணவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அனுராதபுரம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அனுராதபுர நகரின் பல பகுதிகளிலும் முறையற்ற வகையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலே இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 358 பேர் இவ்வாறு பொலிஸாரினால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த சந்தேக நபர்களில் 100 பேர் மாணவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தனியார் மேலதிக வகுப்புக்கு செல்வதாகக் கூறி குறித்த மாணவர்கள் வீடுகளில் இருந்து சென்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட குறித்த மாணவர்கள், பெற்றோரின் முன்னிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட குறித்த மாணவர்களில் சிலர் போதைப்பொருள் பழக்கத்துக்கும் அடிமையாகிய