Posts

Showing posts from February, 2019

யாழ்ப்பாணக் கோட்டையும் கிரலாகல தூபியும்.

Image
முஹம்மட் ஹாஸில்,  ஷாலினி சாள்ஸ் யாழ்ப்பாணக்குடா நாட்டின் தென் விளிம்பில் யாழ்ப்பாணாக் கடனீரேரியின் கரையில் கம்பீரமாக யாழ்ப்பாணக் கோட்டை அமைந்த்திருந்த்தது. யாழ்ப்பாணக் கோட்டை என்பது யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் சிதைவடைந்த நிலையில் இருந்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒல்லாந்த அரசின் உதவியுடன் திருத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக்கோட்டை ஐந்து கொத்தளங்களை (Bastions) கொண்டிருந்தது. கடனீரேரி பக்கமாக இரண்டு கொத்தளங்களையும், நிலப்புறமாக மூன்று கொத்தளங்களையும் கொண்டிருந்தது. இந்த ஐந்து கொத்தளங்களும் தெளிவாகப் பெயரிடப்பட்டிருந்தன. கோட்டையின் வடபுறக் கொத்தளம் உற்றெச் (Utrecht) என அழைக்கப்பட்டது. வடகிழக்குப்புறக் கொத்தளம் ஹெல்டர்லாந்து (Gelderland) என்றும், தென்கிழக்குப் புறக் கொத்தளம் ஒல்லாந்த்து (Holand) என்றும் தென் மேற