யாழ்ப்பாணக் கோட்டையும் கிரலாகல தூபியும்.



முஹம்மட் ஹாஸில், ஷாலினி சாள்ஸ்

யாழ்ப்பாணக்குடா நாட்டின் தென் விளிம்பில் யாழ்ப்பாணாக் கடனீரேரியின் கரையில் கம்பீரமாக யாழ்ப்பாணக் கோட்டை அமைந்த்திருந்த்தது.

யாழ்ப்பாணக் கோட்டை என்பது யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் சிதைவடைந்த நிலையில் இருந்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒல்லாந்த அரசின் உதவியுடன் திருத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணக்கோட்டை ஐந்து கொத்தளங்களை (Bastions) கொண்டிருந்தது. கடனீரேரி பக்கமாக இரண்டு கொத்தளங்களையும்,
நிலப்புறமாக மூன்று கொத்தளங்களையும் கொண்டிருந்தது. இந்த ஐந்து கொத்தளங்களும் தெளிவாகப் பெயரிடப்பட்டிருந்தன. கோட்டையின் வடபுறக் கொத்தளம் உற்றெச் (Utrecht) என அழைக்கப்பட்டது. வடகிழக்குப்புறக் கொத்தளம் ஹெல்டர்லாந்து (Gelderland) என்றும், தென்கிழக்குப் புறக் கொத்தளம் ஒல்லாந்த்து (Holand) என்றும் தென் மேற்குப் புறக் கொத்தளம் சீலாந்து (Zeeland) என்றும் வடமேற்குப்புறக் கொத்தளம் பிறிஸ்லாந்து (Friesland) என்றும் அழைக்கப்பட்டன. இந்த ஐந்து கொத்தளங்களும் நெடும் மதில்களினால் இணைக்கப்பட்டிருந்தன. கொத்தளங்களை இணைக்கின்ற மதில் ஒவ்வொன்றினதும் நீளம் ஏறத்தாள 554 அடிகளாகும். கொத்தளங்களின் சுற்றளவைத் தவிர்த்து சுற்று மதிலின் மொத்த நீளம் 3960 அடிகளாகும். முக்கோண வடிவினதான கொத்தளங்கள் ஐந்த்தினையும் உள்ளடக்கியதாக உட்கோட்டையின் சுற்றளவை பார்க்கில் 6300 அடிகளாகவுள்ளது.


யாழ்ப்பாணக் கோட்டை மதில் உச்சியில் இருபது அடி அகலமானது அடித்தளதிற்கு அது நாற்பது அடிவரை அகன்று விரிந்து செல்கிறது. வெகு அற்புதமாக அம்மதில்களை அமைத்துள்ளனர். மதிலின் வெளிப்புறம் ஏறத்தாள ஆறடி அகலத்தில் முருகைக்கற்களினால் கட்டப்பட்டது. உட்பக்கம் நான்கு அடி அகலக்கட்டமைப்பை கொண்டுள்ளது. இவ்விரு கட்டுக்களுக்கும் இடைப்பட்ட பரப்பு மண்ணால் நிரவப்பட்டுள்ளது. இம்மதில்கல் அகழி மட்டத்திலிருந்து ஏறத்தாழ முப்பது அடிகள் கம்பீரமாக உயர்ந்து நிற்கின்றன. உண்மையில் இவை பலமானஅரண்களே. எவ்வளவு வலிமைவாய்ந்த பீரங்கிகளாலும் தகர்ந்தெறியமுடியாத மதிற் சுவர்கள். உட்கோட்டையைச் சுற்றி அமைந்துள்ள சுரியும் நீரும் கொண்ட அகழி அற்புதமான அழகும், பாதுகாப்பும் கொண்டது. உயர் கொத்தளப்பகுதியில் அகழியின் அகலம் 132 அடிகளாகவும், மதிலின் நடுப்பகுதியிலிருந்து நோக்கும் போது அகழியின் அகலம் 158 அடிகளாகவும் இருப்பதைக் காணலாம். 3960 அடிகள் நீளமான இக் கோட்டையின் சுற்றுமதிலைச் சூழ்ந்து 6400 அடிகள் நீளமான அகழியின் வெளிச் சாய் சுவர் அமைந்திருக்கிறது.

அகழி வெளிமதிற் சாய் சுவரோடு, தாழ் கொத்தளங்கள் நான்கு அமைந்துள்ளன. இந்த தாழ் கொத்தளங்கள் கோட்டை மதில் ஒவ்வொன்றின் நடுப்பகுதிக்கு நேர் எதிரில் அகழுக்கு அப்பால் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை வடிவில் சிறிய கோட்டை அமைப்பின. அதனால் இவற்றினை சின்னக்கோட்டைகள் எனவும் கூறுவர். முற்றவெளியின் முனியப்பர் கோயில் அருகே இத்தகை தாழ் கொத்தளக் கோட்டையுள்ளது. வடக்கில் வீரசிங்கம் மண்டபத்தை நோக்கியும், மேற்கில் பண்ணை பொலிஸ் விடுதியை நோக்கியும் சின்னக்கோட்டைகள் எனப்படும் தாழ் கொத்தளங்கள் உள்ளன. இன்னொரு தாழ் கொத்தளம் பிரதான வாயிலின் நுழை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்றது. இத்தாழ் கொத்தளங்கள் முருகைக்கற்களினால் கட்டப்பட்டு உட்புற ஒடுங்கிய பாதைகளைக் கொண்டனவாகவும் முருகைக்கற்களினால் மூடப்பட்ட கூரை கொண்டனவாகவும் உள்ளன. இத்தாழ் கொத்தளங்களில் ஒவ்வொரு காவலரண் கூடுகள் உள்ளன. உயர் கொத்தளங்களில் முக்கோணத்தின் முனைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்றாக மூன்று காவலரண்கள் இருந்த்தன. ஆக மொத்தமாக 19
காவலரண் கூடுகள் கோட்டையில் இருத்தன. அகழி வெளிச்சுவரின் மத்தியில் முற்றவெளியோடு அமைந்த பாதுக்காப்பற்ற தாழ் கொத்தளங்கள் எதிரிகளின் வருகையை முதலில் தடுக்கும் நிலைகளாகும். இத்தாழ் கொத்தளங்களினால் எதிரிப்படையை தடுக்க முடியாவிடில், உயர் கொத்தளங்கள் அடுத்து செயற்படும். தாழ் கொத்தளங்கள் நில மட்டத்தோடு அமைந்த்தவை உயர் கொத்தள்ங்கள் அகழிக்கு அப்பால் முப்பதடி உயரத்தில் பாதுகாப்பாக அமிக்கப்பட்டிருப்பவையாகும். இவற்றை விட மதிலில் பத்தடிக்கு ஒரு பீரங்கி பொருத்தக்கூடிய இடைவெளி அமைக்கப்பட்டிருந்தது.


கிரலாகல தூபி என்பது அனுராதாபுர மாவட்டத்தில் ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் அமைந்துள்ள இரகசிய பகுதியாகும். இவ் வரலாற்று மிக்க இடத்திற்கு வெஹெரதிகல  எனும் பெயரும் உண்டு.

இது சுமார் 250 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. இங்குள்ள முக்கிய பகுதியாக தெப்ப குளம் காணப்படுகின்றது. இது அனுராதாபுர தெப்ப குளத்தை விட பெரியது. இதன்  நீளம் 50 மீற்றரும் அகலம் 25 மீற்றருமாக காணப்படுகின்றது.

மேலும் பண்டைய வணக்க வழிபாடுகளுக்கான மிக அமைதியாக  இடமாக பதனாகார எனும் பகுதியும் இங்கு உண்டு. இந்த பதனாகார  என்பது  பெளத்த பிக்குகளுக்கு சமய வழிபாடுகளுகாக கஜபாரஜபு மன்னனால் அமைக்கப்பட்டதாகும்.

இங்கு வரலாற்று சிறப்பு மிக்க தூபியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

ஹொரவபொத்தானயில் நேற்றிரவு நடந்த சோக சம்பவம்...!

ஹொரொவ்பொதானையில் நடந்தது என்ன?? ஹொரொவ்பொதானை பெரிய பள்ளிவாசல் தலைவர் விளக்கம்.