ஹொரொவ்பொதானையில் நடந்தது என்ன?? ஹொரொவ்பொதானை பெரிய பள்ளிவாசல் தலைவர் விளக்கம்.


ஹொரொவ்பொதானை நகரிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமையப் பெற்றுள்ளதே கிவ்லேகட கிராமம். இக்கிராமத்தில் ஆசிரியர்கள், உலமாக்கள், புத்தி ஜீவிகள், அரச திணைக்கள அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள், வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் என பல தரப்பட்டோர் வாழ்கிறார்கள். 

நாட்டில் ஏற்பட்டிருகின்ற ஒரு அசாதாரண அச்சமான சூழ் நிலையால் மக்கள் ஒன்று கூடுவதனை சுகாதார பாதுகாப்பு நலன் கருதி அரசு தடைவிதித்துள்ளது. இது அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சார்ந்த சகல தரப்பினருக்கும் பொதுவானது. இது பற்றி சகல கலாசார திணைக்கலங்களும் அதன் கீழ் இயங்கும் பிரிவுகளுக்கும் தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளன. இதனடிப்படையிலேயே மஸ்ஜித்கள், மத்ரஸாக்கள், மக்தப் பிரிவுகள் போன்ற பல்வேறு பிரிவுகள் மூடப்பட்டிருந்தன. அனேக நாடுகளிலும் இதுவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பித்த பிறகு மற்றும் தளர்த்திய பிறகு எவ்வாறு நடக்க வேண்டும் என்று பொலீஸ் மற்றும் MOH ஊடாக மக்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அதனை மீறுவது யாராக இருந்தாலும் தவறே. இலங்கையர் என்ற அடிப்படையில் நாம் கட்டுப்பட்டு நடக்கவே வேண்டும். அதனையே இஸ்லாமும் சொல்கிறது.

இச்சட்டத்தை மீறி கடந்த வெள்ளிக்கிழமை( 2020.03.27) நண்பகல் நேரத்தில் பள்ளியில் ஒன்று கூடியதனாலேயே இவ்வசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. போலீசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்தே ஹொரொவ்பொதானை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதேச செயலாளர் மற்றும் MOH போன்றோர் ஸ்தலத்திற்கு விரைந்து நிலவரத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். ஊடகங்கள் சார்பில் வருகை தந்தோர் இவ்வனைத்தையும் படம் பிடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஹொரொவ்பொதானை பஸார் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவரை அவ்விடத்திற்கு அழைத்த போலீஸார் தகவல்களை கேட்டறிந்த பின் இப்பள்ளியை தாழிட்டு தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும்படி பணித்துள்ளனர். 80 க்கும் மேற்பட்டோர் இருந்த சந்தர்ப்பத்தில் விரன்டோடியவர்களைத் தவிர சுமார் 18 பேர் அளவிலே எஞ்சியிருந்தனர். இவர்களிடம் வாக்குமூலம் பதிவுசெய்த போலீஸார் இவர்களை எச்சரித்து விடுவித்துள்ளனர். 

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் வழிகாட்டலிற்கிணங்க ஹொரொவ்பொதானை ஜம்இய்யாவும், ஹொரொவ்பொதானை பஸார் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலும் இணைந்து கடிதங்கள் அனுப்பியும், தொலைபேசியூடாகவும் சகல பள்ளிவாசல்களுக்கும் அறியப்படுத்திய இச்சந்தர்ப்பத்தில் இவர்கள் மட்டும் இதனை பொருட்படுத்தாதது வேதனையளிப்பதோடு சமூகத்திற்கே அவப்பெயரையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏனைய பகுதிகளில் போன்று சட்டத்தை மீறியவர்களுக்கு நிகழந்ததை போன்று இவர்களுக்கும் அடி விழுந்திருந்தால் நிலமை என்னவாக இருக்கும்?????

பொலீஸார் மிகவும் மனிதபிமானமாக இவர்களை வழிநடாத்தியுள்ளனர்.

மு.ப 11.50 மணியளவில் ஹொரொவ்பொதானை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர், கிவ்லேகட ஜும்ஆ பள்ளி நிர்வாக தலைவரை தொடர்பு கொண்டு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியும் அதனை பொருட்படுத்தாததன் காரணம் என்ன???

கடந்த 2020.03.26 ஆம் தேதி ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின் பொது மக்கள் எவ்வாறு நடக்க வேண்டும் என்று பொலீஸ் தலைமையகம் வெளியிட்ட குரல் பதிவை ஹொரொவ்பொதானை பிரதேசத்திலுள்ள சகல பள்ளிவாசல்களிலும் பகிரங்கமாக மக்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இவர்கள் மட்டுமே அறிவிக்காததன் உள்நோக்கம் என்ன????

இக்கிராமத்தை சூழ பெரும்பான்மை சமூகம் இருப்பதனால் அவர்கள் இவர்களுக்கு எதிராக செயற்பட்டால் நிலமையை எவ்வாறு கட்டுப்படுத்துவது????

இதனை காரணம் காட்டி நாட்டில் ஏனைய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பாக அமையுமல்லவா ??? ( கடந்த காலங்களில் நடந்தேறியதைப் போன்று)

இலங்கை சட்டத்தை மதித்து நடப்பது இலங்கை வாழ் மக்களின் கடமையாகும்.

பல்லின சமூகத்திற்கு மத்தியில் இனநல்லுறவைப் பேனிநடக்க பழக வேண்டும்.

குறிப்பு: இதனை யாரும் தேவையற்ற விதத்தில் விமர்சிக்க வேண்டாம். 


இப்படிக்கு,
தலைவர் 
AAM.சியாம் ஹாஜியார்
ஹொரொவ்பொதானை பஸார் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், 
ஹொரொவ்பொதானை. 
2020.03.28.

Comments

Popular posts from this blog

யாழ்ப்பாணக் கோட்டையும் கிரலாகல தூபியும்.

ஹொரவபொத்தானயில் நேற்றிரவு நடந்த சோக சம்பவம்...!