வேகமாக பரவி வரும் போலி செய்தி... ஹொரவ்பொத்தான வாழ் மக்கள் அச்சப்பட வேண்டாம்.

இலங்கையில் மிகப் பெரிய உயிருள்ள யானையாகக் கருதப்படும் 'கல்கமுவே காவந்திசா' என்ற யானை ஹொரவ்பொத்தான யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்லத் தயாராகி வருவதாகக் குறிப்பிட்டு கடந்த நாட்களில் பல பேஸ்புக் பக்கங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் மிகப் பெரிய உயிருள்ள யானையான 'கல்கமுவே காவந்திசா யானை' ஹொரவ்பொத்தான யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்!  "கல்கமுவா காவந்திசா யானையின் உயிருக்கு குரல் எழுப்பு" என்ற கருப்பொருளின் கீழ் ஏராளமான சமூக ஊடக பயனர்களிடையே பரவி வருகிறது.

ஒரே கருத்தை வழங்கும் பதிவுகள் பல்வேறு வழிகளில் வழங்கப்பட்டுள்ளன என்பதும் காண முடிகிறது. 


இது குறித்த உண்மைகளை உறுதிப்படுத்த வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் ஊடகப் பிரிவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியபோது கல்கமுவாவிலிருந்து காவந்திசா என்ற யானையை ஹொரவ்பொத்தான யானைகள் சரணாலயத்திற்கு அழைத்துச் செல்லும் எண்ணம் எதுவும் இல்லை என்று வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் தலைமை ஊடக அதிகாரி கூறினார். 

இது தொடர்பில் வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் “இதுபோன்ற எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.... என்றவாறும் குறிப்பிட்டுள்ளார். 

அதன் பின்னர் கல்கமுவா காவந்திஸ்ஸா யானையை சிறைபிடிக்கப்பட்டு ஹொரவ்பொத்தான யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகக் கூறும் பல பேஸ்புக் பக்கங்களில் உள்ள பதிவுகள் அகற்றப்பட்டதையும் அவதானிக்க முடிகின்றது. 

Comments

Popular posts from this blog

யாழ்ப்பாணக் கோட்டையும் கிரலாகல தூபியும்.

ஹொரவபொத்தானயில் நேற்றிரவு நடந்த சோக சம்பவம்...!

ஹொரொவ்பொதானையில் நடந்தது என்ன?? ஹொரொவ்பொதானை பெரிய பள்ளிவாசல் தலைவர் விளக்கம்.