இ்ளைஞர் பாராளுமன்றம் ஒர் விரிவான பார்வை.

முஹம்மட் ஹாசில் (ஊடகவியலாளர்)

சிறந்த சமூக சிந்தனை மிக்கதுமான, சிறந்த ஆளுமை திறன் மிக்கதுமான ஓர் இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவதற்கான தெனிப்பொருளின் கீழ் கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து இளைஞர் விவகார அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் Sri Lanka Youth ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்டதே இளைஞர் பாராளுமன்றம்.

இந்த இளைஞர் பாராளுமன்றமானது இவ்வருடமும் அரங்கேரி உள்ளது.

மேலும் மனித குலத்தின் அபிவிருத்திக்காக தம்மை அர்ப்பணித்த, நிறைவான ஆளுமையைக் கொண்ட, ஒழுக்க நெறிமுறைகளைக் கொண்ட நாட்டுப்பற்றுள்ள இளம் தலைமுறையினரை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.

இனம், மதம், மொழி, அரசியல் பேதங்களின்றி அனைத்து இளைஞர்களும் ஒரே அமைப்பின் கீழ் ஒன்றிணைந்து செயற்படத்தக்க விதத்தில் அவர்களிடையே ஒற்றுமையையும், நட்பையும், ஒத்துழைப்பு மனப்பான்மையையும் கட்டி எழுப்புதல்.

இளைஞர்களது திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.

தேசிய அபிவிருத்திக்குரிய பொருளாதார, சமூக, கலாச்சார, தேவைப்பாடுகள் தொடர்பான விளக்கத்தை இளம் சமுத்தாயத்தினருக்குப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் அது தொடர்பாக நேர்மறையாகச் சிந்திப்பதற்கு அவர்களைத் தூண்டுதல்.

கலை, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார மற்றும் ஆற்றல் விருத்திக்கும் அவற்றைப் பேணிப்பாதுகப்பதற்கும் இளைய தலைமுறையினரை ஊக்குவித்தல்.

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இளைஞர்களை ஈடுபடுத்துதலும் தொண்டர் சேவைகளில் அவர்களை ஈடுபடுத்துதலும்.

சனநாயக வாழ்க்கை முறைக்கு இளைஞர்களை பழக்கப்படுத்துதல்.

இளைஞர் யுவதிகளது ஓய்வு காலத்தை சிறந்த வகையிலும் வினைத்திறனான வகையிலும் செலவழிப்பதற்கும் அவர்களது ஆற்றல்களையும் திறமைகளையும் முன்வைப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.

இளைஞர் யுவதிகளது ஆளுமையை விருத்தி செய்தலும் அவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சிகளை வழங்குதலும்.

இளைஞர் மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பான பயிற்ச்சிகளை வழங்குதல்.

இளைஞர் யுவதிகளை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்கு ஊக்குவித்தல் என்பன அவற்றின் நோக்கங்களாகும்.

மொத்தத்தில் இளைஞர்களின் தலைமைகளாக செயற்படுதல் என்பதாகும்!

இருந்த போதும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக இருப்போரை தவிர இதனால் பலனடைந்தோர் இன்று வரை யாருமில்லை, பலனடையும் பொருட்டு சுதந்திரமாக செயற்படும் அதிகாரம் அவர்களின் பாராளுமன்ற அரசியலமைப்பில் இல்லை என்பதே உண்மை. இதனை கடந்த காலங்களில் நடைபெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலின் ஊடாக சற்று சிந்தித்தால் நன்கு விலங்கக்கூடியதாக இருக்கும்

இளைஞர்களின் நேரத்தையும் சக்தியையும் வீண்டிக்கக்கூடிய,(சிலவேளை) சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு கூட எந்தவித்த்திலும் பயனளிக்காத ஒரு அர்த்தமற்ற தேர்தல் எனலாம்.

பல கலைச்சொற்களின் மூலம் இளைஞர்களை உள்வாங்கி அவர்களின் கலாச்சார மார்க்க விழுமியங்களை இல்லாதொழித்து மத ஒதுக்கல் ஜனநாயக தாராண்மைவாத விழுமியங்களின் அடிப்படையில் வார்த்தெடுக்கும் ஓர் மறைமுக முயற்சியே இது.

இதற்கு உதாரணமாக இளைஞர் சேவை மன்றங்களினால் ஏற்பாடு செய்யப்படும் பயிற்சிப்பட்டறை, கருத்தரங்குகள், போன்றவற்றில் போதிக்கப்படும் பால் நிலை சமத்துவம் போன்ற கருத்தியல்களை அவதானிக்கலாம்.

பாராளுமன்ற அமர்வுகளுக்கு செல்வதற்காக பிரயாணச் செலவு எனும் பெயரில் கொஞ்சமாக சில்லறை வழங்கப்படுமே தவிர மேலதிகமாக தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு ஏதாவது சேவை செய்ய ஒரு சில்லறை கூட ஒதுக்கப்பட்டடுவதும் இல்லை என்றாலும் தங்களின் செந்த பணத்தினை வாரி இறைத்தே ஏதாவது செய்தாக வேண்டும் அவ்வாறு செய்வார்கலா என்பது கோள்விக்குறி

மற்றப்படி புகழுக்காக பெயருக்கு பின்னால் அடைமொழியொன்றை சொறுகிக்கொள்ள அலைந்து திரியும் உயர்குல செல்லங்களுக்கு இந்நிலை பதவிகள் பொறுத்தமாகவிருக்கும்.

இந்த இளைஞர் பாராளுமன்ற தேர்தல்களினால் இளைஞர்களுக்கும் பிரயோசனம் இல்லை என்பது மட்டும் உண்மை.

Comments

Popular posts from this blog

யாழ்ப்பாணக் கோட்டையும் கிரலாகல தூபியும்.

ஹொரவபொத்தானயில் நேற்றிரவு நடந்த சோக சம்பவம்...!

ஹொரொவ்பொதானையில் நடந்தது என்ன?? ஹொரொவ்பொதானை பெரிய பள்ளிவாசல் தலைவர் விளக்கம்.