ஹொரவ்பொத்தான முஸ்லிம் மஹா வித்தியாலயதின் மாபெரும் ஆலோசனை வழிகாட்டல் கருத்தரங்கு.

ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் முன்னனி முஸ்லிம் பாடசாலைகளில் ஒன்றான ஹொரவ்பொத்தான முஸ்லிம் மஹா வித்தியாலயதின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் சேவை பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஆலோசனை வழிகாட்டல் கருத்தரங்கொன்று கடந்த செவ்வாய்கிழமை (04) பாடசாலையின் அதிபர் ஜனாப் S. அப்துல் சத்தார் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இக் கருத்தரங்கில் பிரதான வளவாளர்களாக தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் உளவியல் ஆலோசகர் Y.M நிம்சாத் மற்றும் கொபிதிகொாள்ளாவ வலயக்கல்வி  பணிமனையின் உளவியல் ஆசிரிய ஆலோசகர் H.B ஜயதிலக ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த முறையில் விரிவுரைகளை வழங்கினார்.

மேலும் இக் கருத்தரங்கில் பாடசாலையின் மாணவர்கள்,  பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பலதரப்பட்டவர்கள் கலந்து கொண்டு பெரிதும் நன்மை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

யாழ்ப்பாணக் கோட்டையும் கிரலாகல தூபியும்.

ஹொரவபொத்தானயில் நேற்றிரவு நடந்த சோக சம்பவம்...!

ஹொரொவ்பொதானையில் நடந்தது என்ன?? ஹொரொவ்பொதானை பெரிய பள்ளிவாசல் தலைவர் விளக்கம்.